தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை துவம்சம் செய்து திரும்பியுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அடுத்ததாக, ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்று வென்றது. அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 3-1 என வென்றது. இதன் மூலம் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் இரண்டு தொடர்களை வென்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து, ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியா அணி, இந்தியா வருகிறது. மார்ச் 12ம் தேதி துவங்கும் இந்தத் தொடரில், இரு அணிகளும் மூன்று ஒருதினப் போட்டிகளில் விளையாட உள்ளன.
The Indian women’s cricket team is scheduled to play three ODIs against Australia at home, starting 12 March.