ஆர்கே நகரில் 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் தொகையை திருப்பி பெற 150 கோடி ருபாய் செலவு செய்ய வேண்டி இருந்தது என்று ஆர் கே நகர் எம் எல் ஏ டிடிவி தினகரன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிடிவி தினகரன் மக்களை சந்தித்து பேசி வருகிறார் இந்நிலையில் மாவட்டத்தில் மக்களை சந்தித்து பேசிய அவர் மக்கள் எடப்பாடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மீண்டும் அம்மா வின் ஆட்சி வர வேண்டும் என்று செல்கின்ற இடம் எல்லாம் தன்னிடம் கோரிக்கை வைக்கிறார்கள் என்றும் ஆர்கே நகரில் 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் தொகையை திருப்பி பெற 150 கோடி ருபாய் செலவு செய்ய வேண்டி இருந்தது என்றும் தெரிவித்தார் . ஏற்கனவே ஆர் கே நகரில் டிடிவி தினகரன் பெருமளவில் ஓட்டுக்கு பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது .பணப்பட்டுவாடாவை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் நடைபெற்றது அப்போதும் டிடிவி தரப்பினர் ஆர் கே நகர் மக்களுக்கு பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது .தற்போது 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் தொகையை திருப்பி பெற 150 கோடி ருபாய் செலவு செய்ய வேண்டி இருந்தது என்று டிடிவி தினகரனின் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
DES : RK Nagar MLA TDV Dinakaran has spoken to the controversy that he had to spend Rs 150 crore to repay the amount of 10 thousand rupees in the city.