நடிகை கஸ்தூரி மீது போலீஸில் புகார்

Filmibeat Tamil 2018-03-06

Views 2

சாதி கலவரத்தை தூண்டும் வகையில் ட்விட்டரில் கருத்து தெரிவிப்பதாக நடிகை கஸ்தூரி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை கஸ்தூரி ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். பல்வேறு நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அவரது கருத்துகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் வேலாம்புதூரில் கணவனை இழந்த ஆராயி அவரது மகள் பலாத்காரம் செய்யப்பட்டது, அவரின் மகன் கொலை செய்யப்பட்டது குறித்து கஸ்தூரி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். பின்னர் அவர் ட்வீட்டியதாவது, பிழைக்கு வருந்துகிறேன். மன்னித்துவிடுங்கள். வேலாம்புதூர் படுகொலை குறித்து முந்தைய கீச்சில் 'அன்னியக்கும்பல்", Anniyar, என்பதற்கு பதில் "Vanniyar" என்று எழுத்துப்பிழை காரணத்தால், அந்த கீச்சை நீக்குகிறேன். அந்த கீச்சை யாரும் SS எடுத்து தொடர்ந்து பகிரமாட்டீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.

A complaint has been given against actress Kasthuri accusing her of kindling communal riot by tweeting controversially. Kasthuri is very active on twitter expressing her views about various things.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS