தேனி மாவட்டம் குரங்கணி விபத்து மீட்பு பணியில் ஏஎல்எச் என்ற நவீன ஹெலிகாப்டரை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார். தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது.இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக #TheniForesfire, #TheniFire ஆகிய ஹேஷ்டேகுகள் சென்னையில் டுவிட்டரில் டிரென்டாகி வருகின்றன.