குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்த நிஷாவின் குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். தேனி மாவட்டம் குரங்கணி காட்டு பகுதிக்கு கடந்த வாரம் 36 பேர் கொண்ட குழுவினர் மலையேற்ற பயிற்சிக்கு சென்றனர். அப்போது அவர்கள் திரும்பி வரும் வழியில் காட்டு தீ ஏற்பட்டது.