ஆசை ஆசையாய் காதல் திருமணம் செய்து கொண்ட கணவர் விவேக் மரணமடைந்தது தெரியாமலேயே அவரது மனைவி திவ்யா இன்று உயிரிழந்து விட்டார். இதன் மூலம் குரங்கணி மலைப்பகுதியில் நிகழ்ந்த காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஞாயிறன்று குரங்கணி மலை பகுதியில் காட்டுத் தீ பரவியது. இதில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 9 பேர் சம்பவ இடத்தில் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களுள் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள்.