காவிரிக்காக மதுரை, தூத்துக்குடி, கோயம்பேடு மார்க்கெட் கடைகள் மூடல்

Oneindia Tamil 2018-04-03

Views 869

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பிக்குப் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆளும் அதிமுக சார்பாக இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு வணிகர் சங்க பேரமைப்பு, தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், மருந்துக்கடைகள் சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்திருப்பதால், மதுரையில் பெரும்பாலான கடைகள், உணவகங்கள், மருந்துக்கடைகள் மூடப்பட்டிருந்தன. அதிமுக கட்சியின் சார்பாக நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டம் என்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.

Koyambedu Vegetables market shuts for Cauvery issue. 2500 and more shops involve in the protest. Shops protest in Madurai and Tuticorin for Cauvery issue.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS