கலர்ஸ் டிவி-யின் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் மூலம் தான் திருமணம் செய்துகொள்ள மணப்பெண் தேடி வருகிறார் நடிகர் ஆர்யா.
16 இளம்பெண்கள் போட்டியாளர்களாகக் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் படி தற்போது மீதமிருக்கும் மூன்று போட்டியாளர்கள் யார் யார் என்ற விபரம் தெரியவந்துள்ளது.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'எங்க வீட்டு மாப்பிள்ளை'. இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் இதுவரை ஜெய்ப்பூரில் நடைபெற்றது. தற்போது சென்னை திரும்பி, ஒவ்வொரு போட்டியாளரின் வீட்டுக்கும் சென்று ஷூட்டிங் நடத்தி வருகின்றனர்.
தனக்கு மணப்பெண்ணாக வரவிரும்பும் போட்டியாளர்களின் வீடுகளுக்குச் சென்று வருகிறார் ஆர்யா. பெண் பார்க்கும் வைபவம் ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறுகிறது. கும்பகோணத்தில் அபர்ணாதி வீட்டுக்கு பெண் பார்க்கச் சென்றபோது ஷூட்டிங்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண்ணிய அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இந்த நிகழ்ச்சியில் இறுதியில் மூன்று போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்த மூவர் யார் என்ற விபரம் தெரியவந்துள்ளது. அகதா, சீதாலக்ஷ்மி, சுசானா ஆகிய மூன்று பேரில் ஒருவரைத் தான் ஆர்யா இறுதியாக தேர்வு செய்யவிருக்கிறார்.
சுசானா கனடாவைச் சேர்ந்தவர். அகதா கனவுலகில் வாழ்வதைப் போலவே பேசும் பெண். சீதாலக்ஷ்மி ஆர்யாவை நிலவுடன் ஒப்பிட்டுப் பேசிக்கொண்டே இருப்பார். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த அபர்ணாதி நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார்.
Actor Arya is looking for a bride to get married by Colors TV's 'Enga veettu mappillai' program. According to the shooting of the show, only three contestants are remaining.
#arya #engaveetumappillai