கர்நாடக மாநில அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூருவுக்கு கர்நாடக மாநில அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. அந்தப் பேருந்து தலைமைத் தபால் நிலைய நிறுத்தம் அருகே வந்தபோது நாம் தமிழர் கட்சியினர் 15 பேர் பேருந்தை மறித்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும் கர்நாடக அரசைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர். கர்நாடகப் பேருந்தின் கண்ணாடியையும் உடைத்தனர் தகவலறிந்த கடலூர் புதுநகர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து நாம் தமிழர் கட்சியினர் 15 பேரை கைது செய்தனர். இதேபோல் பாமக சார்பில் முழு அடைப்பு போரட்டம்நடைபெற்றது . மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கபட்டன
DES : We arrested the Tamil parties for arresting the glasses of Karnataka state government