தேசிய விருது பெறும் 'டூ லெட்' படத்தின் ஹீரோ சந்தோஷ் நம்பிராஜன் பேட்டி #Exclusive

Filmibeat Tamil 2018-04-13

Views 5

இன்று 65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது செழியன் இயக்கியிருக்கும் 'டூ லெட்' திரைப்படம். இன்னும் திரையில் வெளியாகாத 'டூ லெட்' திரைப்படம் சர்வதேச அளவில் விருதுகளைக் கைப்பற்றி வருகிறது. இப்படத்தில் லீட் ரோலில் நடித்திருக்கும் சந்தோஷ் நம்பிராஜன் கவிஞர் விக்ரமாதித்யனின் இரண்டாவது மகன். 'டூ லெட்' படத்தில் நடித்து ரசிகர்களின் பரவலான கவனத்திற்கு உள்ளாகியிருக்கும் சந்தோஷ் நம்பிராஜனிடம் 'டூ லெட்' படம் குறித்தும், தேசிய விருது பெற்றது குறித்தும் பேசினோம்.
'டூ லெட்' வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து மாறுபட்ட இன்டிபென்டன்ட் மூவி. தேசிய விருது கிடைத்திருப்பதன் மூலமாக இந்தப் படம் இன்னும் அதிகமான பார்வையாளர்களைச் சென்றடையும். ஒரு சரியான படத்தை விருதுக்குத் தேர்ந்தெடுத்ததுக்கு ஷேகர் கபூர் தலைமையிலான தேர்வுக் குழுவுக்கு நன்றிகளைத் தெரிவிச்சுக்குறோம்."

Chezhiyan's 'To Let' film selected for National Award for Best Tamil Movie. Santhosh Nambirajan plays the lead role in this film. An exclusive interview with Santhosh Nambirajan is here.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS