சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'சுமங்கலி' சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் திவ்யா. தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றி பின்னர் சீரியல் நடிகையாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் திவ்யா.
'லட்சுமி வந்தாச்சு' சீரியலில் நெகட்டிவ் ரோல், 'சுமங்கலி' சீரியலில் அனைவரும் விரும்பும் மருமகள் ரோல் என கலக்குகிறார். இதற்கிடையே 'அடங்காதே' திரைப்படத்தில் சரத்குமாரின் ஜோடியாகவும் நடித்திருக்கிறார்.
சீரியலில் அசத்தி வரும் நிலையில் சினிமா பக்கமும் ஒரு ரவுண்டு வரும் திட்டத்தில் இருக்கும் திவ்யாவிடம் பேசினோம். அவரது பேட்டி இங்கே..
" 'சுமங்கலி' சீரியலில் நடிக்க ஆரம்பிச்சு ஒரு வருஷம் கம்ப்ளீட் ஆகிருக்கு. இப்போதான் சீரியலில் இன்ட்ரெஸ்டிங்கான பல முடிச்சுகள் ஓப்பன் ஆகி பார்க்க செம பரபரப்பா போய்க்கிட்டு இருக்கு. சீரியல் பார்வையாளர்களின் வரவேற்பு இப்போ அதிகமா கிடைச்சிட்டு இருக்கு."
Divya is the heroine in 'Sumangali' serial telecasting in Sun TV. We talked to Divya about her career. Here is an interview with Divya.
#sumangali #suntv #divya