கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மாவை கிரிக்கெட் ரசிகர்கள் திட்டித் தீர்த்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மா ஸ்டேடியத்திற்கு வந்தால் அவரின் கணவர் ஆடும் அணி தோல்வி அடையும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய ஆட்டத்தை அனுஷ்கா நேரில் கண்டு ரசித்தார்.
பெங்களூர் அணி சிறப்பாக பேட்டிங் செய்ததை பார்த்து குஷியான அனுஷ்கா பின்னர் சென்னை அணி வெளுத்து வாங்கியதை பார்த்து கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி தோல்வி அடைந்ததற்கு அனுஷ்கா தான் காரணம் என்று கூறி அவரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்துள்ளனர். அனுஷ்கா வந்தாலே அந்த போட்டி விளங்காது என்று கிரிக்கெட் பிரியர்கள் விளாசியுள்ளனர்.
போட்டியில் தோற்றால் அதற்கு அனுஷ்கா மீது பழிபோடுவது தவறு என்று கோஹ்லியும் பல முறை சொல்லியும் யாரும் கேட்பது இல்லை. தற்போதைய தோல்விக்கும் அனுஷ்கா மீதே பழிபோடுகிறார்கள்.
Cricket fans have blasted actress Anushka Sharma for coming to the stadium to watch the IPL match between RCB and CSK. Anushka is blamed for RCB's loss.
#anushkasharma #kohli #rcb #csk #ipl2018 #t20 #memes