அமெரிக்காவிற்கு மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றிருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் உதவியாளர் சஞ்சய் ஆகியோருடன் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற ரஜினிகாந்த் அங்கு 2 வாரங்கள் ஓய்வெடுத்துவிட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார். ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக பெயர் மாற்றிய ரஜினி தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிப்பேன் எனக் கூறியிருந்தார். மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.