எஸ்.வி. சேகரின் படுக்கை போஸ்ட்டிற்காக அமெரிக்காவில் பெண்கள் போராட்டம்- வீடியோ

Oneindia Tamil 2018-05-25

Views 4

பெரிய ஆட்களுடன் படுக்காமல் அவர்களால் ஒரு ரிப்போர்ட்டராகவோ செய்தி வாசிப்பவரோ ஆகி விட முடியாது என்று எஸ்.வி. சேகர் பகிர்ந்த போஸ்டை எழுதிய திருமலைராஜனை கண்டித்து அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்றது.
பெண்களை இழிவுபடுத்தி “மதுரை யூனிவர்சிட்டியும், கவர்னரும், பின்னே கன்னிப்பெண்ணின் கன்னமும்” என்று முகநூல் பதிவுபோட்ட “திருமலை ச”-வுக்கு எதிராக கலிபோர்னியாவின் வளைகுடாப் பகுதியில் பெண்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவரின் முகநூல் பதிவைத்தான் எஸ்.வி. சேகர் பகிர்ந்து, அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு தலைமறைவானார். எஸ்.வி. சேகரின் வழக்கில் அவர் பகிர்ந்த பதிவை எழுதிய “திருமலை ச” யாரெனத் தெரியவில்லை என்று அவரது வழக்கறிஞர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசு வழக்கறிஞரும் அதே கருத்தையே தெரிவித்துள்ளார்.
திருமலை வீட்டருகே வசிக்கும் பல்வேறு தேசங்களைச் சார்ந்த மக்கள் ஆர்வத்துடன் ஊர்வலம் பற்றியும், பெண்களின் கோரிக்கை பற்றியும் கேட்டறிந்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். தொடக்கம் முதல் முடிவுவரை மவுண்டன் ஹவுஸ் காவல்துறை அதிகாரி உடனிருந்து பாதுகாப்பு கொடுத்தார்.


Tamil women protested outside the residence of NRI Thirumalairajan in the USA for writing ill of women journalists on social media which was later shared by S.Ve. Shekher.

#svsekar #svshekar #svesekar #usa #nri #thirumalairajan

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS