தனியாக பயணித்த பெண் பயணியை தாக்கி உடைகளை களைந்து போட்டோ பிடித்த 'ஓலா' கால் டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டார். பெங்களூர் கோடிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 26 வயதாகும் அந்த பெண். ஆர்கிடெக்காக வேலை பார்த்து வருகிறார்.
மும்பை செல்வதற்காக, ஜூன் 1ம் தேதி அதிகாலை 2 மணியளவில் தனது வீட்டில் இருந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் செல்வதற்காக செடான் வகை காரை ஓலா நிறுவனத்தின் வாயிலாக புக் செய்தார். அருண் என்ற டிரைவர் காருடன் வீட்டில் இருந்து பெண்ணை பிக்அப் செய்தார். ஜீவன்பீமா நகர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் டோல்கேட் செல்லாமல் வேறு வழியில் காரை திருப்பியுள்ளார் அருண்.
A 26-year-old woman in Bengaluru was held captive in an Ola cab and allegedly molested by the driver who also forced her to strip for photos.