விஸ்வரூபம் 2 படத்திற்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்தால் ஒரு அரசியல்வாதியாக அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். உலக நாயகன் கமல் ஹாஸன் எழுதி, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விஸ்வரூபம் 2 பட ரிலீஸ் தள்ளிப் போனது உள்ளிட்டவை குறித்து கமல் ஹாஸன் பேசியுள்ளார்.