சென்னை புழல் சிறையில், ரவுடிகள் நடுவே ஏற்பட்ட மோதலில், பாக்சர் முரளி என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாக்சர் முரளி.
3 கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட 16 வழக்குகளில் இவரது பெயர் அடிபட்டது. எனவே சில மாதங்கள் முன்பாக குண்டர் சட்டத்தின்கீழ் பாக்சர் முரளியை போலீசார் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.