தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே மக்கள் அஞ்சுகின்றனர்.
இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Chennai Meteorological center says Tamil Nadu and Puduchery may get thunder rain. There is a rain chance for Chennai at night times.