டீசல் விலை, காப்பீட்டு கட்டணத்தினை குறைக்க வேண்டும் நாடு முழுவதும் உள்ள சுங்கசாவடி கட்டணத்தினை சீர்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழ்நாடு அவசர பொதுக்குழுக் கூட்டம் மாநில தலைவர் திரு. குமாரசாமி தலைமையில் நாமக்கல்லில் நடைபெற்றது. தென் இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. சண்முகப்பா முன்னிலையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் சேலம், சங்ககிரி, ஈரோடு, கோவை, கரூர், திருச்சி தர்மபுரி உள்ளிட்ட மாவட்ட லாரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது டீசல் விலை குறைக்க வேண்டும் காப்பீட்டு தொகையை குறைக்க வேண்டும், சுங்கசாவடி கட்டணத்தினை ஆண்டுக்கு ஒரு முறை வசூலிக்க வேண்டும் (அல்லது) நாடு முழுவதும் உள்ள சுங்கசாவடி கட்டணத்டதினை ஒரு சீராக வசூலிக்க வேண்டும் என்பன கோரிககையை வலியுறுத்தி வரும் 20 &ந் தேதி 6 மணி முதல் நாடு தாழுவிய காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் கோடி வருவாய் இழுப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்தி 50 ஆயிரம் லாரிகள் இந்த வேலை நிறுத்தில் ஈடுப்படவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.