நாளை மறுநாள் முதல் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதால் சேலம் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் சரக்கு முன் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மூன்றாம் நபர் காப்பீடு உயர்வு சுங்க கட்டண உயர்வு சட்ட விரோமாக அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் சங்கத்தினர் நாளை மறுதினம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சரக்கு புக்கிங் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
des: The merchandise has been canceled due to a lorry strike from tomorrow.