சென்னை மாங்காட்டில் சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து எரித்து கொன்ற வழக்கில், கைது செய்யப்பட்டு தஷ்வந்த் என்ற கொடூரன் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் பணம் தரவில்லை எனக் கூறி அவரது தாய் சரளாவையும் கொலை செய்தான். ஹாசினி மற்றும் சரளா கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என உறுதி செய்த செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை விதித்தது. 5 பிரிவுகளின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி வேல்முருகன் கூறினார். இதனால் அந்த பிரிவுகளின் கீழும் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து கொடூரன் தஷ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தான். தஷ்வந்தின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் மிகுந்த பரபரப்பாக காணப்படுகிறது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV