ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி இரண்டும் தீவிரவாதம் தான் என்றும் அதை திமுக ஒழிப்போம் என்று கனிமொழி தெரிவித்தார்.
விழுப்புரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் எம்பி கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது சேலம் 8 வழி சாலையை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். அவ்வாறு எதிர்ப்பவர்களை இந்த அரசு கைது செய்வதுடன் செய்தி சேகரிக்க செல்கின்ற செய்தியாளர்களையும் மக்களிடம் குறைகளை கேட்க செல்கின்ற அரசியல் வாதிகளையும், சமூக ஆர்வலர்களை கைது செய்கின்றனர் என கூறினார். மேலும் இந்த 8வழி சாலையில் தமிழக முதல்வர் 1500 கோடி ரூபாய் ஊழல் செய்வதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்துள்ளார் எனவும் கூறினார். தமிழகத்தில் தீவரவாதம் அதிகரித்து விட்டதாக பொன். ராதாகிருஷ்ணன் உட்பட மத்தில் இருந்து வரக் கூடிய அமைச்சர்கள் எல்லோரும் சொல்கிறார்கள் என்றும் எங்களுக்கு தெரிந்த வரை ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி இவை இரண்டும் தான் தீவிரவாதம் எனவும் நாங்கள் அதை ஒழிப்போம் என்று தெரிவித்தார். கனிமொழி பேசும் போது அங்கிருந்த மசூதி ஒன்றில் தொழுகைக்காக பாங்கு ஒலிக்கப்பட்டது. அப்போது தன் பேச்சை நிறுத்தி விட்டு பாங்கு சத்தம் முடிந்தபின் மீண்டும் பேச ஆரம்பித்தார் என்பது குறிப்பிடதக்கது.