விமான நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பயணிகளிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கணக்கில் வராத 8 லட்சம் ரூபாய் கைப்பற்றபட்டது. 19க்கும் மேற்பட்டோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மதுரை விமான நிலையத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கடத்தி வருவதை சுங்க இலாக்கா அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர். அப்படி இருந்தும் ஒருசில அதிகாரிகள் உதவியுடன் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக சிபிஐக்கு புகார்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து கடந்த மூன்று தினங்களாக சிபிஐ அதிகாரிகள் திருச்சி விமானநிலையத்தில் சோதனை நடத்தியதுடன் சுங்க இலாக்கா அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று பயணிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 19க்கும் மேற்பட்டோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைதொடர்ந்து மதுரை விமான நிலையத்திலும் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் மதுரை விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Des : Rs 8 lakh was not counted during the course of searches conducted by the CBI officers to the officers and passengers of the airport.