மும்பை இந்துமாதா சினிமா அருகே உள்ள கிரிஸ்டல் டவர் என்ற அடுக்குமாடி கட்டிடத்தின் மேல்தளங்களில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, 10 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். புகையின் அளவு படிப்படியாக அதிகரித்து 3-ம் நிலையை எட்டியபோது தீப்பிழம்புகள் வெளியே தெரிந்தது. இதனையடுத்து கட்டிடத்தில் இருந்தவர்கள் ராட்சத கிரேன் மூலம் வெளியேற்றப்பட்டனர்.