தாராபுரம் ரோட்டில் அரசு மருத்துவமனை அருகே இளநீர் கடை நடத்தி வருபவர் இளையபாரதி. தனது கடை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 5 பேர். அவர்கள் கொண்டு வந்த ஆயுதங்களால் இளநீர் வியாபாரி இளையபாரதியை சரமாரியாக தாக்கியதுடன் அரிவாளால் வெட்டியுள்ளனர். இளைய பாரதி சத்தம் போட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். மக்கள் கூடுவதை கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர். இதுகுறித்து அருகில் இருந்த சோதனை சாவடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்தனர். தப்பி ஓடிய 5 பேரை போலீசார் விரட்டி சென்றனர். அவர்களில் 2 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர். மற்ற 3 பேர் காரில் தப்பி விட்டனர். இது குறித்து அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. திருப்பூர் எம்.எஸ். நகரில் போலீசார் சோதனை நடத்திய போது காரில் தப்பி சென்ற மற்ற 3 பேரையும் போலீசார் பிடித்தனர். பிடிபட்ட 5 பேரையும் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முருகன், காளிமுத்து, ஜெய் கணேஷ், மணிகண்டன், இம்ரான் என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது இளநீர் வாங்கல் கொடுக்கலில் ஏற்பட்ட பிரச்சணையால் இளையபாரதியை தாக்கியதாக கூறியுள்ளனர். அவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
They have claimed that they have hit the junior by the issue of cocaine delivery. The police arrested them and are continuously investigating.