ஆட்டோ டிரைவர் கதிரை சந்தித்த பிறகு தமிழிசை செய்தியாளர்களைச் சந்தித்தார்.. அப்போது யாரும் கதிரை தாக்கவில்லை என்று அதிரடியாக பேட்டியும் அளித்தார். பேட்டியின்போது கதிருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக அவர் சொன்னார். அதை தவிர்க்க டானிக் வழங்குவதாக நான் கூறினேன் என்று கூறி விட்டுச் சென்றார். தனக்கு குடிப்பழக்கம் உள்ளதாக தமிழிசை கூறியதால் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளார் கதிர். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழிசை என்னைப் பார்க்க வந்தபோது, நான் கேள்வி கேட்கத்தான் முயன்றேன். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என்று விளக்கினேன். என்னை யார் தாக்கியது என்பது எனக்கு சரியாக நினைவில்லை. போலீஸார் வந்து என்னைக் கூட்டிச் சென்று விட்டனர். எனக்குக் குடிப்பழக்கம் என்பது தனிப்பட்ட விவகாரம். இதை பொது இடத்தில் பகிரங்கமாக அவர் கூறியது அதிர்ச்சி தருகிறது, அது தவறு. என்று கூறியுள்ளார்
Auto Driver Kathir has said that, I told her (Dr Tamilisai Soundararjan) that I just wanted to ask a question.I don't know who hurt me,it was dark & after that police took me away. She told media about my drinking habits. That's a personal problem, she said that in public. I don't want to make an issue out of it.
#tamilisai
#autodriver