இலங்கை பிரதமராக ராஜபக்சே தேர்ந்தெடுத்து இருப்பது தமிழ் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.என்று ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இலங்கை பிரதமராக ராஜபக்சே தேர்ந்தெடுத்து இருப்பது தமிழ் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அந்த நாட்டினுடைய ஜனநாயகத்திற்கு சவால்விடும் வகையில் அமைந்திருக்கிறது.என்றும் தெரிவித்தார் இந்திய அரசு அங்கு வாழும் தமிழ் மக்களுக்கும் அவர்களுடைய நிலையை தெரிந்து அறிந்து ராஜபக்சே உடைய தலைமை எப்படி இருந்தது தமிழ் மக்கள் எந்த நிலைக்கு ஆளானார்கள் என்று உணர்ந்து வேடிக்கை பார்க்காமல் தமிழ் மக்களது பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதிசெய்ய வேண்டும்.அதே நேரத்தில் தமிழக மீனவர்களுக்கும் இந்திய அரசு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.என்றார்
Des: Rajapaksa elected as Sri Lankan Prime Minister has suffered an insecure environment for the Tamil people.