எப்படி தொடர்ந்து பேருந்தை ஓட்ட முடியும்! ஊழியர்கள் போராட்டம் - வீடியோ

Oneindia Tamil 2018-11-09

Views 1

தொடர்ந்து 3 நாட்களுக்கு வண்டி ஓட்ட வற்புறுத்தியதால் தொழிலாளர்கள் நள்ளிரவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர்

வேலூர்மாவட்டம்,கொணவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பணிமனை உள்ளது இங்கிருந்து சென்னை -சித்தூர் சேலம் உள்ளிட்ட பல இடங்களுக்கு இப்பணிமனையில் தொழிலாளர்கள் போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்கி வருகின்றனர் போக்குவரத்து தொழிலாளர்களை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக ஓய்வும் அளிக்காமல் அவர்களை பணி செய்ய வற்புறுத்தி பேருந்துகளை கொடுத்து தொடர்ந்து இயக்க வலியுறுத்தி வந்ததால் மக்கள் நலனுக்காக அவர்களும் பேருந்துகளை இயக்கினார்கள் ஆனால் இன்றும் பேருந்துகளை தொடர்ந்து இயக்குங்கள் என கூறி பேருந்துகளை பணிமனையில் நிறுத்த அனுமதிக்காமலும் வசூலான பணத்தை நடத்துநர்களிடமிருந்து பெற மறுத்து அவர்களை வணிக மேலாளர் பொன் பாண்டியன் என்பவர் தரக்குறைவாக பேசி வண்டிகளை இயக்குங்கள் என்று மிரட்டியதால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிமனையை முற்றுகையிட்டு நள்ளிரவில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து தங்களை ஓய்வின்றி பணி செய்ய நிர்பந்திப்பதாகவும் இதனால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் மேலும் தாங்கள் தொடர்ந்து பேருந்துகளை இயக்கினால் விபத்துகள் ஏற்படும் எனவும் அவ்வாறு இயக்க மறுப்பவர்களுக்கு குற்ற ஆணை வழங்கியுள்ளதாகவும் தங்களை கடுமையான வார்த்தைகளால் பேசுவதாகவும் வசூலித்த பணத்தை கூட பெற்றுகொள்ளாமல் நாங்களே வைத்திருந்தால் அச்சம் ஏற்படுவதாகவும் பணிசுமை மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்த திடீர் ஆர்பாட்டம் நடைபெற்றது

Des: Workers stormed the office in midnight for a three-day drive to drive

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS