போக்ஸோ சட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது.செய்யபட்டுள்ளார்
வ.உ.சி நகரை சேர்ந்த குழந்தைவேலு 50வயது தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றன.அதே காம்பவுண்டு வீட்டில் கண்ணன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கண்ணன்னின் 9வயது மகளை கடந்த 24 ஆம் தேதி அன்று வீட்டில் மின்சாரம் தடை செய்யப்பட்டதை அறிந்த குழந்தைவேலு வீட்டில் மொட்டை மாடிக்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தார். அதன் பிறகு வழக்கம்போல் சிறுமி பள்ளிக்குச் சென்று வந்த நிலையில் உடல்நிலை குறைவு ஏற்பட்டது இதை அறிந்த அவரது தாயார் கேட்டபோது குழந்தைவேலு பாலியல் தொந்தரவு ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் சிறுமின் தந்தை புகார் கொடுத்தார். திருவொற்றியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குழந்தைவேலுவை பிடித்து விசாரணை நடத்தினர். காவல்துறை விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் குழந்தைவேலுவை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
Des: The arrest of an old woman who was sexually harassed by the girl in the Boxo Act