மருத்துவர்கள் இல்லாததால் காய்ச்சலுக்கு 2 வயது சிறுவன் உயிரிழப்பு- வீடியோ

Oneindia Tamil 2018-12-03

Views 494

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கொடும்பட்டியைச் சேர்ந்தவர் சின்னவர் என்பவரின் மகன் பழனிவேலு (வயது காய்ச்சல் அதிகமாக இருந்ததின் காரணமாக வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு மருத்துவர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து சிறுவனின் உடலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் சிறுவன் இறந்த தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் தான் சிறுவன் உயிரிழக்க நேர்ந்தது. ஆகவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசாரும், மருத்துவ அதிகாரிகளும் சம்மந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மருத்துவர்கள் எப்போதும் பணியில் இருக்க நடவடிக்கை எடுப்பதோடு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Des:Doctors have a fever 2 years old boy dead

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS