கன்னியாகுமரி மாவட்டம் தமிழ கேரள எல்லைப் பகுதியான ஊரம்பு பகுதியில் கிளாசிக் ஸ்போர்ட்ஸ் கிளப் என்ற பெயரில் தனியார் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது இந்த மதுபான விடுதி தேவாலயம் மற்றும் பள்ளிக்கு இடையூறாக இருப்பதால் இந்த மதுபான விடுதிக்கு எதிராக அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் இந்நிலையில் இன்று மாவட்ட வருமான வரி துறை அதிகாரி ஜெயராமன் தலைமையில் 15 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் இந்த கிளப்பில் உறுப்பினரல்லாதவர்களும் மது அருந்தி வருகின்றனர் சோதனை நடத்து கொண்டிருந்த நேரத்தில் கழிவறையில் 500க்கும் மேற்பட்ட மதுபானங்கள் பதுக்கி வைக்கபட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது இவை போலி மது பானம் என தெரிய வந்துள்ளது இந்த நிகழ்வுகளை செய்தியாளர்கள் ஒளிப்பதிவு செய்ததை பார்த்த மதுபான விடுதி ஊழியர்கள் கேமரா மற்றும் செல்போன்களை பிடுங்கி பதிவுகளை அளித்ததோடு தாக்குதலில் ஈடுபட்டனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொல்லங்கோடு போலீஸார் மதுபான விடுதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Income Tax Department Department Thugs attacking journalists
#IncomeTax
#Alcohol
#Hostel