நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு சென்று வருகிறது. இதில் தமிழகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்களான பால் அரிசி காய்கறி பழங்கள் போன்ற கேரள மாநிலத்தில் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் இருந்து தடை செய்யப்பட்டுள்ள சட்டவிரோதமான செயல் களும் இவ்வழியாக கொண்டு செல்வது வழக்கமாகிவிட்டது. மாடு கடத்தல் ஜல்லி மணல் கற்கள் பான்மசாலா குட்கா கஞ்சா போன்ற சட்டவிரோதமான செயல்கள் இவ்வழியாக கொண்டு செல்லப்படுவதால் சோதனைச் சாவடியில் அதிநவீன கேமரா பொருத்தி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி முறையான ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு செல்லுதல், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பணம், பரிசு பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா என்று அதிகாரிகள் இரவு பகலாக தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
DES : Surveillance work intensified by the serious vehicle test results in the Puliyarai checkpoint