தேசிய ஒருமைப்பாடுக்கு கேடு தான் வரும் ! தம்பிதுரை ஆவேசம்-வீடியோ

Oneindia Tamil 2018-11-13

Views 294

மத்திய அரசின் திட்டங்களுக்கு பிராந்திய மொழியில் அந்தந்தமாநிலங்களுக்கு உட்பட்ட மொழியில் பெயர் வைக்காமல் ஹிந்தியில் பெயர்வைத்தால் தேசிய ஒருமைப்பாடு எப்படி வரும். கேடு தான் வரும். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்

கருரில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ராஜீவ் கொலைகுற்றவாளிகள் விடுதலை தொடர்பாக சட்டத்திற்குட்பட்டு அமைச்சரவை கூடி முடிவெடுத்து தமிழக மக்களின்என்னத்தை நிறைவேற்றும் வகையில் கவர்னரிடம் தரப்பட்டுள்ளது.ஒரு முறை அமைச்சரவை கூடி மனுஅளித்துள்ளதால் கவர்னர் முடிவெடுக்க வேண்டும் அதைத்தான் எதிர்பார்த்துகொண்டிருக்கிறோம்.காங்கிரஸ் அரசாக இருந்தாலும்பிஜேபி அரசாக இருந்தாலும் எந்த ஒருதிட்டத்தையும் காலதாமதம் செய்வதால தான் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு வருவதாக தெரிவித்த அவர்

சர்வ சிக்ய அபியான் ராஷ்ட்ரிய மத்திய சிக்ஷா அபியான் என மத்திய அரசின் திட்டங்களுக்குஹிந்தியில்பெயர் வைத்தல் மற்றமாநிலத்தவருக்கு எப்படி மத்திய அரசின் திட்டங்கள்குறித்து தெரியும் எனவும் மத்திய அரசின் திட்டங்களுக்கு பிராந்திய மொழியில் அதாவது அந்த மாநிலங்களுக்குட்பட்ட மொழியில் திட்டங்களின் பெயர்கள் ஏன்வைக்கவில்லை? இது தான்இந்தியாவின் ஒருமைப்பாடு என்பதா? என்றும் இதனால் ஒருமைப்பாடு வராது கேடு தான் வரும்என்றார்.

Des: National Integration of Central Government Programs in Hindi The ruin will come. Lok Sabha Deputy Speaker Thambidurai said

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS