மக்களவை தேர்தலில் வெற்றி என்பது அ.தி.மு.கவிற்கு உறுதி- தம்பித்துரை- வீடியோ

Oneindia Tamil 2019-04-24

Views 388

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வரும் மே மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அ.தி.மு.க சார்பில் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க தலைமை கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை, கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிர்வாகிகளிடையே ஆலோசனை நடத்தினார். கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பித்துரை, மக்களவை தேர்தலில் வெற்றி என்பது அ.தி.மு.கவிற்கு உறுதி செய்யப்பட்டது தான் என்றும், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார். மேலும், கடந்த தேர்தலில் அ.தி.மு.க சின்னத்தில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, தற்போது தி.மு.க சின்னத்தில் நிற்பதாகவும், நிறம் மாறுபவர்களுக்கு நாம் இடம் கொடுக்க கூடாது என்றும் தெரிவித்தார்.

des : The success of the Lok Sabha election is confirmed by the

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS