கோவை ராமநாதபுரம் ஏரிமேடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 18-ஆம் தேதி காணாமல் போனார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்கில் தொடர்புடைய அதேப்பகுதியில் உள்ள மற்றொரு தெருவான அம்மன் குளத்தை சேர்ந்த ஜோஸ்வா(29) என்பவர் அந்த சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.
கடந்த 4 நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த சிறுமியை மீட்டதுடன், ரவுடி ஜோஸ்வாவை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவுடி ஜோஸ்வா மீது 3 கொலை வழக்கு, 10 வழிப்பறி வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட 27 வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ரவுடி ஜோஸ்வா, காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லும்போது எதிர்பாராத விதமாக சாலையில் தோண்டப்பட்டிருந்த குழிக்குள் தவறி விழுந்ததால் கால் முறிந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களை எல்லாம் நடுரோட்டில் கற்களால் அடித்தே கொல்ல வேண்டும். அதுதான் சரியான தண்டனை.