டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்க கோரி கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரபள்ளி போடப்பனூர் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ராஜாவை படுகொலை செய்தும், பணத்தினை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தினை கண்டித்தும், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக அரசினை வலியுறுத்தியும், கரூரில் கரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் கரூர் மாவட்ட தலைவர் ஆர்.இளங்கோவன் தலைமை வகித்தார். மேலும், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மாவட்ட செயலாளர் ராஜதுரை, தமிழ்நாடு விற்பனையாளர் சங்கம் மாவட்ட தலைவர் கே.கே.சுரேஷ், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மாவட்ட தலைவர் ராஜேஸ்கண்ணன், சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் பத்ம ஸ்ரீ காந்தன் உள்ளிட்ட ஏராளமான டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங்கள் கலந்து கொண்டு அரசினை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.