#ThiruThanikachalam
#Thanikachalam
#Siddha
சென்னை ஜெய் நகர் கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்தமருத்துவமனையின் மருத்துவர் க. திருத்தணிகாசலம் கரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறிவருகிறார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை ஒரே மருத்துவமனைக்கு மாற்றுங்கள். அவர்களுக்கு அரசு மருத்துவர்கள் சிகிச்சை தரட்டும். நோயாளிகள் மருத்துவர்கள் கொடுக்கும் மருந்தோடு சேர்த்து நான் கொடுக்கும் மருந்தையும் எடுத்துக்கொள்ளட்டும். இதனால் எந்த பின்விளைவும் வராது. இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் இந்த நோயால் ஏற்படும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய பண்பு இரண்டு அல்லது மூன்று நாட்களில் மாறிவிடும். 10 நாட்களில் இந்தியாவில் உள்ள அனைத்து கரோனா நோயாளிகளையும் நான் குணமாக்கிவிடுவேன். இந்த நோய் மற்றவர்களுக்கு பரவுவதை தடுத்து விடுவேன். என கூறியுள்ளார்.