கொய்யாவில் பல்வேறு வகைகள் இருந்தாலும் அலகாபாத் சபேதா மற்றும் லக்னோ-49 ஆகிய இரண்டும் வணிக நோக்கில் பயிரிட மிகவும் ஏற்றவை. இப்போது சிவப்புக் கொய்யாவுக்கு நல்ல விலை கிடைப்பதால், லலித், அர்கா கிரண் மற்றும் அர்கா ரேஷ்மி ஆகிய ரகங்களை விவசாயிகள் விரும்பிப் பயிரிடுகிறார்கள். அவர்களில் ஒருவர், ஆற்காட்டைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஜெயமுருகன். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு-செய்யாறு சாலையில் இருக்கும் முப்பதுவெட்டி கிராமத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கும் அத்திதாங்கல் கிராமத்தில் இருக்கிறது விவசாயி ஜெயமுருகனின் தோட்டம். ஒரு காலை வேளையில் கொய்யா பறித்துக்கொண்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.
ஒருங்கிணைப்பு, வீடியோ, எடிட்டிங் : துரை.நாகராஜன்
#Guava #PasumaiVikatan