#Corona #Covid19
உலகமே கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுதலால் பிரச்னையில் இருக்க, அதை வெற்றிகரமாகச் சமாளித்திருக்கும் ஒரு சில நாடுகளில் ஒன்று கியூபா. தன்னை காத்துக்கொள்வது மட்டுமன்றி உலகைக் காக்க தன் நாட்டின் மருத்துவர்களை இத்தாலி உட்பட பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வருகிறது கியூபா. உலகின் மிக வளர்ந்த நாடுகளே கொரோனாவின் பிடியில் சிக்கித் திணற, ஏழ்மையான மூன்றாம் உலக நாடான கியூபா எனும் சின்னஞ்சிறிய தீவில், இது எப்படிச் சாத்தியமானது? காரணம், பல ஆண்டுக் காலமாக மிக உறுதியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் கியூபாவின் சுகாதாரத்துறை. இன்று மட்டுமல்ல, அவர்கள் முன்பிருந்தே இயற்கை விவசாயத்திலும், சுகாதாரத்திலும் முன்னிலை வகித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இப்போது கொரோனோ வைரஸ் தொற்றை போலவே கியூபாவிற்கு 2010-ம் ஆண்டு சோதனையாக துயர நிகழ்வு நடந்தது. அப்போது இருந்த பிடல்காஸ்ட்ரோ இந்தியாவில் இருந்து நோயெதிர்ப்பு சக்தி கொண்ட தாவரத்தை கியூபாவில் இறக்குமதி செய்து மக்களை அந்தத் துயரிலிருந்து காப்பாற்றினார்.
Reporter: Nagaraj Voice: Soundarya Edit:Ajith