சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்த 7-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றிய காவலாளிகள், லிஃப்ட் ஆபரேட்டர்கள், பிளம்பர் என 17 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியிடமும், அவரின் பெற்றோரிடமும் போலீஸார் விசாரித்தனர். கைதான 17 பேரும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டனர். அப்போது, கைதானவர்கள் கூறிய ஒரே பெயர் ரவிக்குமார்.
Differently abled girl sexually abused in chennai accused statement to police