Reporter - தினேஷ் ராமையா
சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் அணைப் பகுதி வெள்ளத்தில் சிக்கி 16 மணி நேரத்துக்கும் மேலாகத் தவித்தவரை விமானப்படை வீரர்கள் மீட்டனர்.
நாடு முழுவதும், பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. பீகார், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழையால் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுவருகின்றனர்.
#rescue #bilaspurpolice #chhattisgarhflood #flood