மாலுக்குள்ளிருந்து இரவுக் காட்சி சினிமா முடிந்து வெளியே வந்த பொதுமக்கள், கமாண்டோ படையினர் சுற்றிவளைத்திருப்பதைக் கண்டு அச்சப்பட்டனர். கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை எடுத்துக்கொண்டு வெளியே வர முயன்ற அவர்கள், மாலுக்குள் ஏதோ விபரீதம் நடக்கிறது என்று நினைத்து, பதற்றம் அடைந்தனர். அது, தமிழக காவல் துறை கமாண்டோ பிரிவின் பாதுகாப்புப் பயிற்சி ஒத்திகை எனப் பின்னர் தெரியவந்தது.