கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஆழியாறு பகுதியில் ஒரு ஒற்றை காட்டுயானை அடிக்கடி ராஜநடையில் சாலையில் உலாவருவது வாடிக்கையாகி விட்டது. அதேபோல இன்று அதே ஆழியாறு பகுதியில் அதே ஒற்றை காட்டுயானை ராஜநடைபோட்டு சாலையில் நடந்து வந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர்.