என் நண்பர் மூலமா சினிமாவுல பி.ஆர்.ஓ-வாக இருக்கும் நிகில் அண்ணாவின் பழக்கம் கிடைச்சது. சினிமா நிகழ்ச்சிகள், பிரபலங்களை வெச்சு போட்டோ எடுக்கும் வேலை. 2013-ம் ஆண்டுல சேர்ந்தேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே, கமல் நிகழ்ச்சி. போட்டோ எடுக்கச் சொன்னாங்க. எடுத்துக் காமிச்சேன். 'நல்லா இருக்கு'னு பாராட்டினாங்க. அன்னிக்கு எடுக்க ஆரம்பிச்சதுதான், இப்ப வரைக்கும் தமிழ் சினிமாவுல எல்லாத்தையும் எடுத்துட்டேன்.