முன்னாள் பிரதமர், `பாரத் ரத்னா’ வாஜ்பாய் நேற்று காலமானார். வயது மூப்பின் காரணமாகவும் சிறுநீரகத் தொற்று காரணமாகவும் கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று மாலை காலமானார்.இந்நிலையில், வாஜ்பாய் படித்த கான்பூர் கல்லூரியின் முதல்வர் தெரிவித்துள்ள தகவல் அனைவரையும் ஈர்த்துள்ளது. வாஜ்பாய், 1945 -ம் ஆண்டில் எங்கள் கல்லூரியில் எம்.ஏ பொலிட்டிக்கள் சயின்ஸ் படிப்பில் சேர்ந்தார். அதன் பின்னர் சட்டம் பயின்றார். அப்போது, அவரது தந்தை கிருஷ்ண பிகாரி, வாஜ்பாயுடன் படித்தார்” என்றார். இருவரும் ஒரே வகுப்பில் படித்தது மட்டுமல்ல, ஒரே அறையில் தங்கியும் படித்துள்ளனர்.