விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்துள்ள சர்கார் படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. தனியார் கல்லூரியில் நடந்த இவ்விழாவில் விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், முருகதாஸ், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி எனப் படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் பிற நடிகர்களும் கலந்துகொண்டனர். மிகப்பெரிய அளவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது. விழாவை தியா மேனன் மற்றும் நடிகர் பிரசன்னா ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஆடியோவை புதுவிதமாக மக்களே வெளியிடுமாறு வடிவமைத்தனர். கலை நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பலரும் விஜய்யை வாழ்த்திப் பேசினர்.
#sarkaraudiolaunch #vijayspeech #sarkarsongs