தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை இயக்குநர் மகேந்திரன். `முள்ளும் மலரும்', `உதிரிப்பூக்கள்', `ஜானி', `நண்டு', `மெட்டி' என்று அவர் உருவாக்கிய திரைப்படைப்புகள் எல்லாமே தமிழ் சினிமாவுக்கு புதிய பரிமாணங்களைக் காட்டியவை. இயக்குநர் மகேந்திரனைப் பற்றி, ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், நல்ல சினிமாவை நேசிப்பவர்கள் மகேந்திரனை நேசிக்காமல் இருக்கவே முடியாது.