Abraham Lincoln-ன் 156-ஆவது நினைவு தினம், செருப்பு தைப்பவர்களுக்கு இலவச உணவு வழங்கிய Mobile நிறுவனம்

Oneindia Tamil 2021-04-15

Views 1

#AbrahamLincoln #Karur

செருப்பு தைக்கும் தொழிலாளி குடும்பத்தில் பிறந்து உலக அளவில் உள்ள மிகப்பெரிய நாட்டினுடைய குடியரசுத்தலைவராக நியமிக்கப்பட்ட ஆப்ரகாம் லிங்கன் அவர்களின் 156 வது நினைவு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில், குறிப்பாக கரூரில் உள்ள தனியார் செல்போன் நிறுவனமான ஸ்ரீயா மொபைல் நிறுவனத்தினர், மறைந்த அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் அவர்களின் 156 வது நினைவு தினத்தினை கடைபிடிக்கும் வகையில், இன்று கரூர் மாவட்டத்தில் கரூர் பேருந்து நிலையம், ஜவஹர் பஜார், உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள செருப்பு தைப்பவர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மதிய உணவுடன், கொரோனா தடுக்கும் வகையில் பேஸ் மாஸ்க்குகளும் அந்த தொழிலாளர்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தனியார் செல்போன் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி மனோஜ்குமார், மேலாளர் ராஜேந்திரன், துணை மேலாளர் ராக்கேஷ் மற்றும் சந்தோஷ், தீபன்ராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். மேலும், ஒரு செருப்பு தைக்கும் குடும்பத்தில் பிறந்து உலகமே வியக்கும் அளவிற்கு பல்வேறு தரப்பு மக்களும் வியக்கும் பொருட்டு புரட்சியை ஏற்படுத்திய, ஆபிரகாம் லிங்கன் நினைவு தினத்தினை கடைபிடித்த இந்த தனியார் செல்போன் நிறுவனமான ஸ்ரீயா மொபைல் நிறுவனத்தினரின் செயல் இப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றதோடு, அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
Karur mobile company has provided free lunch and face masks to shoemakers remembering aberaham lincoln.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS