முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் வந்தார். அப்போது அவர் குண்டு வைத்து கொல்லப்பட்டார். அவரது நினைவு தினம் ஆண்டுதோறும் மே 21-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.