அரசூரிலுள்ள கேபிஆர் மில்லில் 5 ஆயிரம் பெண் பணியாளர்களுக்கு தனியார் மருத்துவமனை உடன் இணைந்து இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே கே.பி.ஆர் மில் செயல்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் கருமத்தம்பட்டி அரசூர் நீலம்பூர் அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கேபிஆர் குழுமத்தில் மொத்தம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவையில் நோய்த்தொற்று பரவல் அதிகம் உள்ள காரணத்தினால்,வெளியே சென்று தடுப்பூசி போடுவதற்கு வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் மில் நிர்வாகமே முன்வந்து பெண் பணியாளர்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கியுள்ளது. முதற்கட்டமாக 5000 பேருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் பெண் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இந்த முகாமை கேபிஆர் குழும தலைவர் டாக்டர் கே பி இராமசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். உடன் கேபிஆர் மில் துணை தலைவர் தனபால் மனித வள மேலாண்மை துறை தலைவர் தங்கவேல் பாக்கியநாதன் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.